Enable Javscript for better performance
பாசனதாரர்களுக்கு இன்று சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் மொத்தம் 66 பணிகள் ரூ. 20.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
        பாசனதாரர்கள் சங்கங்கள் குடிமராமத்துப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், நிரந்தர கணக்கு எண், சரக்கு சேவை வரி எண் பெறுதல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
        இந்த முகாமில் பாசனதாரர்கள் சங்கங்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என  மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai