Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. 
    ஊர்வலத்தை புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை கி. நிர்மலா தொடங்கி வைத்தார். புதுவளவு, புதுப்பட்டி, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்ற ஊர்வலம் காந்தி சிலை அருகே நிறைவுற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்,  பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் எஸ்.ராணி, பி.இந்திராசான்சி, வி.பாபு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai