Enable Javscript for better performance
மாணவர்களுக்கு வாழும் கலை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை செந்தூரான்  பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கான வாழும் கலைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியின் முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜி. ரகுபதி வரவேற்றார். முதன்மைச் செயல் அலுவலர் ஏவிஎம்எஸ் கார்த்திக் வாழ்த்திப் பேசினார். வாழும் கலை அமைப்பின் மூத்த பயிற்சியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பயிற்சியளித்தார். கல்லூரிக் குழுமத் தலைவர் ஏவிஎம் செல்வராஜ்,  நிர்வாக இயக்குநர் இரா. வயிரவன், துணைத் தலைவர் சோம. நடராஜன் உள்ளிட்டோரும் பேசினர். முடிவில் மாணவர் செல்வின் அட்சுதராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai