Enable Javscript for better performance
விபத்து வழக்கில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    விபத்து வழக்கில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 25th July 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத் தை ஏற்படுத்தி 8 பேரின் இறப்புக்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுநருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
    புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூவரசக்குடி அருகே பால் ஏற்றிச் சென்ற மினி லாரியும், தனியார் பேருந்தும் கடந்த 2013 ஜூன் 19ஆம் தேதி காலை மோதியது. 
    இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மினி லாரியில் ஏறி பள்ளிக்கூடத்துக்குச் சென்ற விஜயரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 7 பேரும், மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.  இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அரிமளம் ஓணான்குடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (56) என்பவரைக் கைது செய்தனர். புதுக்கோட்டை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவில், விபத்தை ஏற்படுத்தி 8 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ஓட்டுநர் பாலச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதலாவது நீதித்துறை நடுவர் எம். அறிவு புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai