Enable Javscript for better performance
விலையில்லா  மடிக்கணினி கேட்டு  முன்னாள் மாணவர்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா  மடிக்கணினி கேட்டு  முன்னாள் மாணவர்கள் மனு

    By DIN  |   Published on : 25th July 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016 - 17, 17 - 18 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் தங்களுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என நாகுடி மற்றும் ஆவுடையார்கோவில் மேல்நிலைப்பள்ளிகளில் மனு அளித்தனர்.
    தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி 2016-17 மற்றும் 2017-  2018 ஆம் கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படாததால்,  நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆவுயார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பாக புதன்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளி முன்னாள் மாணவர்கள் கூடினர். 
    பின்னர் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai