குன்றாண்டார்கோவிலில் கூட்டுப்பண்ணையம் பயிற்சி

கந்தர்வகோட்டை அருகேயுள்ள குன்றாண்டார்கோவிலில் வட்டார தொழில்நுட்ப வேளாண்மை மற்றும் மேலாண்மை

கந்தர்வகோட்டை அருகேயுள்ள குன்றாண்டார்கோவிலில் வட்டார தொழில்நுட்ப வேளாண்மை மற்றும் மேலாண்மை முகமை சார்பில் கூட்டுப்பண்ணையம் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.இளஞ்செழியன் தலைமை வகித்தார்.  வேளாண்மை துணை இயக்குநர் ம.தி. முருகவேல் முன்னிலை வகித்து, கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனத்திட்டம் மற்றும் மத்திய திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். 
பின்னர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துறையின் வேளாண்மை அலுவலர் சுபாஷினி கூட்டுப்பண்ணையம் பற்றிய நோக்கங்கள் குழு அமைத்தல் பற்றிய விபரங்கள் மற்றும் குழு சார்ந்த வேளாண் தொழில்கள் பற்றியும் காணொலி காட்சி மூலம் தெளிவாக விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் நர்மதா கலந்துகொண்டு தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி பேசினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com