பள்ளி தொடங்கிய நாளிலேயே பாடப்புத்தகங்கள் விநியோகம்: ஆட்சியர் தகவல்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பிற துறைகளை விட பள்ளிக் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து அதிக அளவிலான நிதி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் ரூ.28,758 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
பள்ளிகள் தரம் உயர்வு, தேவைக்கேற்ப புதிய ஆசிரியர்கள் நியமனம், புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டுதல், பள்ளிகள் சீரமைப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பேருந்து பயண அட்டை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 215 அரசுப் பள்ளிகளும், 41 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 256 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 
இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட  அரசின் அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 
இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-19 கல்வியாண்டுக்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3,91,083 விலையில்லா பாடப்புத்தகங்களும், 10ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 10,18,738 விலையில்லா நோட்டுப் புத்தகங்களும், 12ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 36,927 விலையில்லா பேருந்து பயண அட்டைகளும், 8ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 1,34,676 விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 30,006 விலையில்லா வண்ணக் கிரையான்கள், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 48,319 விலையில்லா வண்ணப் பென்சில்கள், 10ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 1,72,047 விலையில்லா காலணிகள்,  12ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு 2,01,039 விலையில்லா புத்தகப் பைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,  மாணவிகளுக்கு 15,520 விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com