சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
  புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  பேரணி பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக புதுக்கோட்டை மாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) இரா.சிவகுமார், பல்நோக்கு சமூக சேவைச் சங்க இயக்குநர் ஜேம்ஸ்ராஜ் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai