சுடச்சுட

  

  பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக திரைப்பட  இயக்குநர் பா. ரஞ்சித் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
  இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் எம். கார்த்திக், இளைஞரணிச் செயலர் வி. குபேந்திரன் ஆகியோர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: தஞ்சையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், ஜாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai