வெண்ணாவல்குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கோடை  சிவன் கோயில் அருகேயுள்ள புகழ்பெற்ற வெண்ணாவல்குளத்தில் புதன்கிழமை தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கோடை  சிவன் கோயில் அருகேயுள்ள புகழ்பெற்ற வெண்ணாவல்குளத்தில் புதன்கிழமை தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
  அறந்தாங்கி நகரில் கோட்டை சிவன் கோயில் அருகே மன்னர் காலத்தில் இருந்ததாகவும் சுற்றிலும் செம்பாறாங்கற்களால் அழகாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து பின்னர் தற்காலத்திலும் குடிநீர் குளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வெண்ணாவல்குளம் தற்போது வறண்டு காணப்பட்டது.
இந்தக் குளம் அருகே இருந்த கோட்டை சிவன் கோயில் சில மாதங்களுக்கு முன்னர் புனரமிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.  கும்பாபிஷேக குழு தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு, நகராட்சி ஆணையர் ஆர்.வினோத், காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.கோகிலா, வர்த்தக சங்கத்தலைவர் பா. வரதராஜன் ஆகியோர் இணைந்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
நிகழ்ச்சியில், கோட்டை பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com