முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 18th June 2019 08:55 AM | Last Updated : 18th June 2019 08:55 AM | அ+அ அ- |

விராலிமலையில் வருவாய்த்துறை சார்பில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.
விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சிஸ்சரவணகுமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற வருவாய்துறை அலுவலர்கள், முதியோர் கொடுஞ்செயலை தடுக்கவேண்டும், முதியோர்களை மதிக்கவேண்டும், நாமும் பின்னாளில் முதியோராவோம் என்று நினைக்க வேண்டும், முதியோர்களை குழந்தைகளை போல் பாவிக்க வேண்டும், இதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்று உறுதி மொழியை வாசித்தனர்.