"மியாவாக்கி' முறைப்படி குறுங்காடு வளர்ப்புக்கான 302 மரக்கன்றுகள் நடவு!

ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கியின் கண்டுபிடிப்பான குறுங்காடு வளர்ப்பு முறைப்படி 302 மரகன்றுகள் நடவு செய்யும்

புதுக்கோட்டை: ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கியின் கண்டுபிடிப்பான குறுங்காடு வளர்ப்பு முறைப்படி 302 மரகன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள டிஇஎல்சி தேவாலய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைத்துளி அமைப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுங்காடு வளர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கி என்பவரின் கண்டுபிடிப்பான குறுகிய இட வசதியில் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் குறுங்காடு வளர்ப்பு முறையை மழைத்துளி அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 10ஆவது இடமாக மச்சுவாடியிலுள்ள டிஇஎல்சி தேவாலய வளாகத்தில் 302 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நாட்டு மரங்களான வாகை, புங்கன், நீர்மருது, பூவரசு, ஆல், அத்தி உள்ளிட்ட 30 வகையான மரக்கன்றுகள் இம்முறைப்படி இரண்டு அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டன.
குறைந்த அளவு தண்ணீர் போதுமானது என்ற நிலையில் சூரியஒளிக்காக மரக்கன்றுகள் போட்டியிட்டுக் கொண்டு உயர வளரும் என்கிறார்கள் மழைத்துளிகள் அமைப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com