குடிநீர் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 22nd June 2019 09:04 AM | Last Updated : 22nd June 2019 09:04 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மழையூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மழையூர் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மழையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மழையூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகச்செய்தனர்.