இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி இலங்கை தமிழர்கள் மனு
By DIN | Published On : 25th June 2019 08:40 AM | Last Updated : 25th June 2019 08:40 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் பகுதியில் உள்ள, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அகதிகள், இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு முகாம் திங்கள்கிழளமை நடைபெற்றது. இதில், தேக்காட்டூர் இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவர் ம. மயில்வாகனம் உள்ளிட்டநிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1983இல் இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தின்போது படகின் மூலம் உயிர் பிழைக்க குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். அதன்பிறகு இலங்கைக்கு திரும்பிச் சென்ற நிலையில், 1990இல் நடைபெற்ற போரையொட்டி மீண்டும் படகின் மூலம் இங்கு வந்தோம்.
சுமார் 29 ஆண்டுகள் அரசு சார்பில் வழங்கப்பட்ட முகாமில் தங்கியிருக்கிறோம். எங்கு சென்றாலும் மாலை 6 மணிக்குள் நாங்கள் முகாமுக்குள் வந்துவிட வேண்டும். வேறெந்த சலுகையும் எங்களுக்கு கிடையாது. இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கூட வாங்க முடியா து என்பதுதான் எங்களின் நிலை.
எனவே, இங்கேயே பிறந்து வளர்ந்துவிட்ட எங்கள் வாரிசுகளின் எதிர்காலம் கருதி எங்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.