ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை

கந்தர்வகோட்டை அருகே  அரியாணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

கந்தர்வகோட்டை அருகே  அரியாணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, அரியாணிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்  திருவிழா, பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. ஆனி 1-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. 
ஆனி 9-ஆம் தேதியான திங்கள்கிழமை கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திகடனாக கிடாவெட்டி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com