சுடச்சுட

  

  அறந்தாங்கி, நாகுடி, கீரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

  By DIN  |   Published on : 26th June 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, நாகுடி மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 26) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 
  அறந்தாங்கி அருகே அழியாநிலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. 
  எனவே, அங்கிருந்து மின்விநியோகம் பெறும் அறந்தாங்கி நகர், தொழிற்சாலை, தாந்தாணி, சிலட்டூர், தேனிப்பட்டி, மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை பகுதிகளிலும்,
  நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்  வல்லவாரி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், பெருங்காடு, மேல்மங்கலம், நாகுடி, தொண்டைமானேந்தல், அத்தாணி, கட்டுமாவடி, வேட்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதேபோல் கீரமங்கலம்  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், கீரமங்கலம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனம் மற்றும் செரியலூர் ஜெமீன் ஆகிய ஊர்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai