சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவ ட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் திறன் பயிலரங்கம் வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியது: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பின்றி உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம், வரும் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.   இத்திறன் பயிலரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் உதவித்தொகையுடன் கூடிய தொழில் திறன் பயிற்சிகள், சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பாகவும், அரசு வழங்கும் சலுகைகள், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் மற்றும் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள தங்களின் அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai