சுடச்சுட

  

  பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற அழைப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு அரசு சார்பில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கான, முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில்  சமூக நலத் துறையின் மூலம் செயல்படும்,  முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 1997 முதல் 2001 வரை விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தமிழ்நாடு போக்குவரத்து  வளர்ச்சி  நிதி நிறுவனத்தின் மூலம் வைப்பீடு செய்யப்பட்டது. இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், அவ்விரு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.50,000 வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டிருந்தது. தற்போது பயனாளிகள் அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டதால் முதிர்வு தொகையைப்   பெற்றுக்கொள்ளலாம். முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு, வைப்புத் தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல், பயனாளியின் பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் ஆகிய சான்றுகளுடன்  மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai