சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  தோட்டக்கலைத்துறை இயக்குனர் தினவர்மன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்தை மானியத்தில் அமைப்பது, சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. 
  தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மணி, கார்த்திக், கன்னியா, விவசாய குழு நிர்வாகிகள் சந்திரன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai