சந்தைப்பேட்டை நகராட்சிப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
By DIN | Published On : 02nd March 2019 08:39 AM | Last Updated : 02nd March 2019 08:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். விஜயமாணிக்கம் தலைமை வகித்தார். எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறிவியல் தினத்தை மக்கள் அறியச் செய்வதன் மூலம் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தையும் மனப்பான்மையும் மேம்படுத்த முடியும் என்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ.மணவாளன், மாவட்டச் செயலர் எம்.வீரமுத்து அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் கே. சதாசிவம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவி, ஆசிரியப் பயிற்றுநர்கள் அனிதா, செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பி.விஜி வரவேற்றார். முடிவில் ஆசிரியை ஜே.ஸ்டெல்லாமேரி நன்றி கூறினார்.