பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
By DIN | Published On : 02nd March 2019 08:36 AM | Last Updated : 02nd March 2019 08:36 AM | அ+அ அ- |

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து, அறந்தாங்கியில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அறந்தாங்கி வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் சி. வேலாயுதம் தலைமையில், எம்.ஜி.ஆர்.சிலை முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞரணிச் செயலர்
ஜி. மண்டலமுத்து, கட்சி நிர்வாகிகள் ஏ.சி.பாலகிருஷ்ணன், சி.திருநாவுக்கரசு, ரபீக், சாத்தகுடி ஆர்.ராசு, ஆர்.ஆர். செல்வம், ஜி.ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.