விராலிமலையில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 08:37 AM | Last Updated : 02nd March 2019 08:37 AM | அ+அ அ- |

புதுக்கோட் டை மாவட்டம், விராலிமலையில் வருவாய்த் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறஉள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் வருவாய், காவல்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர்கள் 11 பேர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்களாம்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சரவணசதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.