ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறையினர் நாளை ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:50 AM | Last Updated : 04th March 2019 08:50 AM | அ+அ அ- |

2018 ஏப்ரலுக்குப் பிறகு ஓய்வுபெற்றோருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காததைக் கண்டித்து வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் மண்டலக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் பி. லோகநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். இளங்கோவன், பொருளாளர் எம். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.