நகராட்சியின் வரி உயர்வு: வர்த்தக சங்கம் எதிர்ப்பு

அறந்தாங்கி வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் நகராட்சி விதித்துள்ள 50 சதவீதம் 

அறந்தாங்கி வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் நகராட்சி விதித்துள்ள 50 சதவீதம் மற்றும் 100 சதவீத வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவர் பா. வரதராஜன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் நகராட்சி அறிவித்துள்ள வரி உயர்வு வியாபாரிகளை மிகவும் பாதிக்கும், ஒரே நேரத்தில் வணிக நிறுவனங்களுக்கு  100 சதவீத வரி உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது, இதை சட்ட ரீதியாக அணுக வேண்டும்  என்றும் கருத்து தெரிவித்தனர்.
நிறைவாக  வழக்குரைஞர்களிடம் ஆலோசனை நடத்தி பின்னர் வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மற்றும்  அனைத்து வணிகர்களுக்கும் தெரியும்படி மைக் விளம்பரம் செய்வது, துண்டறிக்கை விநியோகம் செய்வது,
கடுமையான வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு  நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பது.
தலைவர் இதற்காக ஒரு குழுவை அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஆயுட்கால  உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக வர்த்தக சங்க துணைத் தலைவர் நைஸ் கருப்பையா வரவேற்றார். பொருளாளர் எஸ். சலீம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com