சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

  By DIN  |   Published on : 16th March 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்வரும் உள்ளாட்சி  சாதாரணத் தேர்தல்களுக்காக, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
  புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு 116 வாக்குச்சாவடிகளும், அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் கறம்பக்குடி பேரூராட்சியில் 16 வாக்குச்சாவடிகளும், எஞ்சிய  அன்னவாசல், ஆலங்குடி, அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம் மற்றும் பொன்னமராவதி ஆகிய 7 பேரூராட்சிகளிலும் தலா 15 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
  கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,807 வார்டுகளுக்கு 2,325 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 
  வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  இந்தப் பட்டியல்களின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின்  கருத்தை அறியும் கூட்டம் வரும் மார்ச் 18 முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும்.
  இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் 25ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai