சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஓன்றியத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
  ஒன்றிய ஆணையர் எஸ்.ஜானகிராமன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பி.கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர் சி.ரவிச்சந்திரன்  பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.  பயிற்சியில் எல்.என்.புரம், மாங்காடு, நகரம், சேந்தன்குடி, செரியலூர் ஜமீன், செரியலூர் இனாம், பனங்குளம், குலமங்கலம் வடக்கு, குலமங்கலம் தெற்கு ஆகிய கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.    பயிற்சியாளர் வெள்ளையம்மாள் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai