சுடச்சுட

  

  அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்  கூரை வீடு நாசமானது.
  அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலை தாத்தம்பட்டியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மனைவி முனியம்மாள் (55). கூரை வீட்டில் தனியாக வசித்த முனியம்மாள், வீட்டுக்கு அருகே கூரைகளால் வேய்ந்த கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்.
  இந்நிலையில் வெள்ளிக்கிழமை மின் கசிவால் அவரது வீடும்,  வீட்டருகே  இருந்த கோயிலும் தீப்பிடித்து எரிந்தன. அருகிலிருந்தோர் தீயணைக்க முயன்றும்  முடியவில்லை. வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சாம்பலாகின.
  தகலின்பேரில் வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
  சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்ட விஏஓ  ரகுராம் மற்றும் அதிகாரிகள் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai