சுடச்சுட

  

  புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மைக் கல்வி நிறுவனம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
  கல்லூரியின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வழக்குரைஞர் சங்கத் தலைவர் 
  கே. மதியழகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
  அப்போது பேசிய அவர், நுகர்வோர் தங்கள் குறைகளை மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் கொண்டு சென்று தீர்வுகாண முடியும் என்பதை விளக்கினார்.கலப்படப் பொருட்கள் பற்றிய கண்காட்சியை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். 
  மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் அனிதா ராணி, பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai