சுடச்சுட

  

  விராலிமலை அருகே தனியார் பேருந்தில கடத்திச் செல்லப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடியருகே அவ்வழியே சென்ற  வாகனங்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த (புள்ளிவிவர கணக்கெடுப்புப் பிரிவு) ச. சிவாராணி தலைமையிலான அலுவலர்கள்  சோதனையிட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தை சோதனையிட்டதில் சென்னை பாடியில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன விற்பனையாளரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சேதுராமன் மகன் சிவா (32) 100  வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிவா மீது மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு பரிந்துரைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai