சுடச்சுட

  

  வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில்  அறிவியல் ஆலோசனைக் கூட்டம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 10ஆவது அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் மு. ஜவகர்லால் தலைமை வகித்துப் பேசினார்.
  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் மணிவாசன், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முனைவர் வி. அம்பேத்கர் ஆகியோர் பேசினர்.
  வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணப்பாளர் முனைவர் மு.ரா.லதா கடந்த ஆண்டு மற்றும் நிகழாண்டின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். 
  நிகழ்ச்சியின் போது வேளாண்மை விரிவாக்க கையேடு மடிப்பிதழ் மற்றும் சத்து மாவு அறிமுகம் செய்யப்பட்டது. அறிவியல் ஆலோசனைக் குழு வேளாண் உறுப்பினர்கள் ஆர்.ரவி, ந. முத்துலட்சுமி மற்றும் முன்னோடி விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.
  தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் நா. மணிவண்ணன், தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் முனைவர் எஸ். பொற்பாவை, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டி. ராமஜெயம், புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் மு. சுப்பையா, துணை இயக்குநர் (தோட்டக்கலை) எஸ். அருணாசலம், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆர்.எம் சிவக்குமார், நபார்டு 
  வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ் சோமசுந்தரம், கால்நடைத் துறை துணை இயக்குநர் இ. சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
  விதை நுட்பவியல் உதவிப் பேராசிரியர் கே. நெல்சன் நவமணிராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai