சுடச்சுட

  

  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுரை

  By DIN  |   Published on : 16th March 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோ ட்டை மாவட்டத்திலுள்ள 1537  வாக்குச்சாவடிகளிலும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என மண்டல அலுவலர்களை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார்.
  மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 1,537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
  இந்த வாக்குச்சாவடிகள் 136 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் அலுவலர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது வாக்குச்சாவடிகளில் மின்விசிறி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, மேஜை, நாற்காலிகள், தொலைபேசி இணைப்புகள் உள்ளிட்டவை உள்ளதா என்பது குறித்தும் வாக்குச்சாவடி மையங்களில் மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மண்டல அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய படிவத்தில் அறிக்கையாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். தொடர்ந்து அந்த அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு வெளியே 100 மீட்டருக்குள் எந்த தனியார் வாகனமும் நிறுத்தக் கூடாது என்பதையும், 200 மீட்டருக்குள் அரசியல் கட்சிகள் அலுவலகங்களை அமைக்கக் கூடாது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
  அதேபோல, தங்கள் பகுதிக்குள்பட்ட பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியின் செயல்பாடு ஆகியவற்றையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக நடத்த வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திருமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai