சுடச்சுட

  


  அறந்தாங்கி வட்டார வளமையம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வள மையங்களில் படைப்பாற்றல் பயிற்சி  முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  அறந்தாங்கி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம்  தொடக்கி வைத்தார். பயிற்சியில்  படைப்பாற்றல்  கற்றல் செயல்பாடுகள், மாணவர்களின் முழு ஆளுமைத் திறனை  வெளிக் கொணர  வழிகாட்டுதல்,  வகுப்பறை  மேலாண்மை அவசியம் பற்றி ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.  இதேபோன்ற பயிற்சி அறந்தாங்கி  நகராட்சி தொடக்கப்பள்ளி, வட்டார வளமையம், எல்.என்.புரம் மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்றது.
  பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள்  சசிகுமார், சரவணன், ஈஸ்வரன், சுகன்யா, சியாமளா, கவிதா, கோமதி, பார்வதி, மகேஸ்வரி நீலவேணி உள்ளிட்டோர்  கருத்தாளர்களாக செயல்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை! ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்  செய்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai