சுடச்சுட

  


   பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான இளையோர் ரெட்கிராஸ் சங்கத் தொண்டர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான 3 நாள் பயிற்சி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கடந்த மார்ச் 13,14,15 தேதிகளில் நடைபெற்றது.
  இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட 
  இந்தப் பயிற்சியை, கல்லூரியின் முதல்வர் ஜெ சுகந்தி தொடங்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். கருப்பையன் சிறப்புரை நிகழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் செயலர் ஜெ. ராஜாமுகம்மது, இணைச் செயலர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும், ரெட்கிராஸ் அமைப்பின் கொள்கைகள், கோட்பாடுகள், முதலுதவி முறைகள், ரத்ததானம், சுற்றுச்சூழல் கேடுகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். இந்தப் பயிற்சியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 கல்லூரிகளின் மாணவத் தொண்டர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் 100 பேர் பங்கேற்றனர்.  வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai