சுடச்சுட

  


  புதுக்கோ ட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
  புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தார். திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கேகே. செல்லபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலர் சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தர்ம தங்கவேலு, முருகேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 
  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் உதயம்சண்முகம், கவிதைப்பித்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai