சுடச்சுட

  


  தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மொலாசஸ் ஏற்றி வரப்பட்ட புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மொலாசஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. இதனை சிவகங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
  வெள்ளிக்கிழமை இரவு புதுக்கோட்டை சிப்காட் அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் அருகே உணவருந்த சென்றதாகத் தெரிகிறது. அப்போது முறையாக பிரேக் போடவில்லையென்றும் கூறப்படுகிறது.
  இந்த நிலையில் லாரி நகர்ந்து சாலையோரத்திலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் மொலாசஸ் இருந்ததால் தீப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தில் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai