"கல்வியுடன், விளையாட்டிலும் கவனம் தேவை'

கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்  பாரதிதாசன் பல்கலைக் கழக  ஆட்சிமன்ற குழு

கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்  பாரதிதாசன் பல்கலைக் கழக  ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், புதுகை மன்னர் கல்லூரித் தேர்வு நெறியாளருமான  ஏ.எஸ். நாகேஷ்வரன்.
அறந்தாங்கி அருகே நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை  23-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.  கல்லூரித் தாளாளர் நை. முகமது பாரூக் தலைமை வகித்தார். நைனா முகம்மது கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பி. நைனா முகம்மது, என்.எஸ். நைனா முகம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செ. இராபர்ட் அலெக்சாண்டர்  வாழ்த்தினார். ஒலிம்பிக் கொடியேற்றி பரிசு வழங்கிய ஏ.எஸ். நாகேஷ்வரன் மேலும் பேசியது:
மாணவிகள் விளையாட்டுத் துறையில் ஈடுபாட்டுடன் இருந்தால்  உடல் ஆரோக்கியம் மேன்மையுறும் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். விளையாட்டு வீரர்களுக்கு பல துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆகவே மாணவிகள் கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்  என்றார் அவர்.
முன்னதாக அனைத்து துறை விளையாட்டிலும் முதன்மை பெற்ற முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி வி. பவிதா,  100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற 2-ம் ஆண்டு மாணவி டி. சிவரஞ்சனி, மற்றும் 400 மீட்டர் தொடரோட்டத்தில் முதலிடம் பெற்ற ஐ. தாமரைச்செல்வி, ஆர். அகிலா, ஆர்.கார்த்திகா, சி.ரம்யா மற்றும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அதிகப் புள்ளிகள் பெற்ற ஊதா அணிக்கு சாம்பியன் கேடயமும் வழங்கப்பட்டது.
தமிழ்த் துறைத் தலைவர் எம். மோகனா வரவேற்றார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுவேதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com