கொன்னையூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி அருகேயுள்ள பிரசித்த பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி

பொன்னமராவதி அருகேயுள்ள பிரசித்த பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம், பூத்தட்டு, மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பால்குடம் , பூத்தட்டு  எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். 
விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பத்தூர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரிமா சங்கம் போன்ற சேவை அமைப்புகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம், உள்ளிட்டவற்றை வழங்கினர். பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் ம. ரமேஷ், செயல் அலுவலர் அழ. வைரவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர். தொடர்ந்து திங்கள்கிழமை அக்னிகாவடி விழா, ஏப்.8-ல் நாடு வருகை புரியும் விழா,பொங்கல் விழா என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com