தெற்கு மாவட்ட திமுகவில் தேர்தல் பணிக்குழு அமைப்பு

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலர் ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 10 பேர் பணிக்குழு உறுப்பினர்கள்.
பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலர் அடைக்கலமணி, ஒன்றியப் பொருளாளர் மணி அண்ணாத்துரை உள்ளிட்ட 9 பேர் பணிக்குழு உறுப்பினர்கள். பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலர் முத்து, தேனூர் சின்னையா, உசிலம்பட்டி திருப்பதி உள்ளிட்ட 8 பேர் பணிக்குழு உறுப்பினர்கள். திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நாராயணன் உட்பட 14 பணிக்குழு உறுப்பினர்கள். திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் ஆலங்குடி நகரச் செயலர் பழனிக்குமார் உட்பட 11 பணிக்குழு உறுப்பினர்கள். அறந்தாங்கி நகரத்தில் நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட 10 பணிக்குழு உறுப்பினர்கள். மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்றியச் செயலர் சக்தி ராமசாமி தலைமையில் 11 பணிக்குழு உறுப்பினர்கள்.
திருமயம் ஒன்றியத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் அழகு தலைமையில் 11 பணிக்குழு உறுப்பினர்கள். அறந்தாங்கி வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியத் துணை ச் செயலர் தங்க நல்ல கூத்தன் உள்ளிட்ட 15 பணிக்குழு உறுப்பினர்கள். அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்தில் இலக்கிய அணி பொருளாளர் சுப்பையா உள்ளிட்ட 11 பணிக்குழு உறுப்பினர்கள்.ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலர் உதய சண்முகம் தலைமையில் 11 பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com