ஆலங்குடி அருகே கீழாத்தூர் அரசு பள்ளிக்கு கல்விச்சீர்
By DIN | Published On : 24th March 2019 03:10 AM | Last Updated : 24th March 2019 03:10 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் அரசு நடுநிலை நிலைப்பள்ளிக்கு சனிக்கிழமை கல்விச்சீர் வழங்கப்பட்டது.
கீழாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள், கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கல்விச் சீராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி. அர்ச்சுணன் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டுவந்து பள்ளிக்கு வழங்கினர்.
அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.