Enable Javscript for better performance
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்11 பேர் இலங்கை கடற்படையால் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

    By DIN  |   Published on : 27th March 2019 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்கள் நாட்டு கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை  இலங்கை கடற்படை கைது செய்து விசாரித்து வருகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம் , மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஜெகதாப்பட்டினம் கிராமத்திலிருந்து  சுப்பிரமணியன் மகன் மூர்த்திக்கு சொந்தமான விசைப்படகில், அதே 
    கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் சக்தி (45), கந்தசாமி மகன் விஜயசுந்தர்(25), நாகேந்திரன் மகன் பிரேம்குமார்(25), கருப்பையா மகன் தினேஷ்(26)  ஆகியோர் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
    இதுபோல,  ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த சின்னையா மகன் கந்தசாமிக்குச் சொந்தமான விசைப்படகில்  அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் பன்னீர்செல்வம்(27), கருப்பையா மகன் முத்து(50), சுப்பிரமணி மகன் சந்திரன்(40), ராமலிங்கம் மகன் கணேசன்(48), சுப்பு மகன் முருகன்(32), ஜெகதாப்பட்டினத்திலிருந்து மாணிக்கம் மகன் ராமையனுக்கு(42)சொந்தமான விசைப்படகில்  அதே ஊரைச் சேர்ந்த  ராமையன் மகன் பிரசாந்த் (25), மாணிக்கம் மகன் கலைமணி(39)  ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
    இந்த 11 மீனவர்களும் கடல் எல்லையைத்தாண்டி நெடுந்தீவுப் பகுதியில் சட்டவிரோதமாக  மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர்  கைது செய்து  காங்கேசன் துறைமுகக் கடற்படை முகாமுக்கு  கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai