Enable Javscript for better performance
அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதுவதாக பொதுமக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதுவதாக பொதுமக்கள் புகார்

    By DIN  |   Published on : 28th March 2019 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலையொட்டி கந்தர்வகோட்டை பகுதிகளில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் எழுதுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
    தேர்தலை முன்னிட்டு அனுமதியின்றி, நோட்டீஸ், பிளக்ஸ் பேனர் தட்டிகள், சுவர் விளம்பரங்கள் எந்தவொரு கட்சியும் அனுமதியின்றி செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
    இந்நிலையில் கந்தர்வகோட்டை பகுதிகளில் தனியார் கட்டட சுவர்கள், வீடுகளின் சுவர்களில் கட்சியினர் தேர்தல் விளம்பரங்கள் செய்துள்ளனர். இதுகுறித்து  எந்தவொரு அனுமதியும் தங்களிடம் வாங்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  இத்தகைய விளம்பரங்கள் அழிக்கப்படுமா எனவும் அவர்கள் கேட்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai