Enable Javscript for better performance
தாண்றீஸ்வரத்தில் ஜல்லிக்கட்டு; 8 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தாண்றீஸ்வரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி 8 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள தாண்றீஸ்வரம் சத்ரு சம்காரமூர்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நிகழாண்டு ஜல்லிக்கட்டு புதன்கிழமை காலை தொடங்கியது.
    முன்னதாக வாடிவாசல் முன் இலுப்பூர் கோட்டாட்சியர் ஆர். சிவதாசு முன்னிலையில் 101 மாடுபிடி வீரர்கள் உறுதியேற்றனர்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 495  காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காலை 9.30 
    மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கி முதலில் கோயில் காளையும், பின்னர் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.  பல காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் காளைகள் முட்டி காயமடைந்த சிவா, பால்ராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்தல் விதிகள் காரணமாக மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவில்லை.  போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.  பாதுகாப்பு பணிகளில் இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையிலான போலீஸார் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai