Enable Javscript for better performance
"மத்தியில், மாநிலத்திலும்  ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "மத்தியில், மாநிலத்திலும்  ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்

    By DIN  |   Published on : 28th March 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    '"மத்தியில், மாநிலத்திலும்  ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்' என்றார் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.
    பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
    வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை, எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்தியில் நடக்கும் ஆட்சியால் மக்கள் பெரும் பாதிப்பை  அடைந்துள்ளனர்.
    இந்நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளை துல்லியமாக அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை, ஆதங்கத்தை,குமுறலை திமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெளிப்படுத்த வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம், மாநிலத்தில் ஆட்சி மாற்றம்  ஏற்பட வேண்டும் என்றார்.
    தொடர்ந்து சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் பேசியது:காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி. இதனால் பகுதி பகுதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.  எனவே ஏழை எளிய மக்கள் நலன்காக்க எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.
    திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் ராம. சுப்புராம், ஆலவயல் சுப்பையா, டி. புஷ்பராஜ், மதிமுக மாவட்ட செயலர் க. சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தர்ம. தங்கவேல், திமுக நகர செயலர் அழகப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ். பழனியப்பன், மாவட்ட துணை த்தலைவர் எஸ்பி.ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக ஒன்றியச் செயலர் அ. அடைக்கலமணி வரவேற்றார்.  காங்கிரஸ் வட்டாரத்தலைவர் கே.செல்வராஜன் நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai