Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான், கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான், கையெழுத்து இயக்கம்

    By DIN  |   Published on : 28th March 2019 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
    புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய  விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, பிருந்தாவனம், பால்பண்ணை, அரசு மகளிர் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
    மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 77.37 சதவிகித வாக்குகள் பதிவாயின. தொடர்ந்து 2016இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 76.45 சதவிகித வாக்குகள் பதிவாயின.
    இந்த நிலையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக 18 முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

     

    வாக்களிப்பதின் அவசியம் குறித்த வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க முகாம் விராலிமலையில்  புதன்கிழமை நடைபெற்றது
    மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற முகாமை இலுப்பூர் கோட்டாட்சியர் ஆர். சிவதாஸ் தலைமை வகித்து வட்டாட்சியரம் முன் அமைத்திருந்த பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சதீஸ்சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற வருவாய்த் துறையினர் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அமைத்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai