வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீர்த்தத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீர்த்த திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீர்த்த திருவிழா நடைபெற்றது.
 வடகாடு  முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 21 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் மண்டகபடிதாரர்கள், கரைகாரர்கள் சார்பில் சுவாமிக்கு சந்தனக்காப்பு, அபிஷேக ஆராதனைகளும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தீர்த்த திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கிராம மக்கள் மாமன், மைத்துனர் உறவின்முறை கொண்டவர்களிடம் மஞ்சள் பூசி, மஞ்சள் நீரூற்றி விளையாடினர். தொடர்ந்து, மாலை கோயிலில் திரண்ட இளைஞர்கள், பெண்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடினர். இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே இழுத்துவந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனக் காப்பும், திரவிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com