புதுக்குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் ஒரே இடமாக அமைக்கப்பெற்றுள்ள புதுக்குளத்தில்

புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் ஒரே இடமாக அமைக்கப்பெற்றுள்ள புதுக்குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேறெந்த மாவட்டத்திலும் அமைந்திராத ஒன்றாக -புதுக்கோட்டை நகருக்குள்ளேயே ஏறத்தாழ 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதுக்குளம் நகர மக்களுக்கு ஓய்வாகப் பொழுதைக் கழிக்க ஓர் அரிய வாய்ப்புதான்.
அச்செடுத்து வெட்டப்பட்ட சதுரக் குளமாக அமைந்துள்ள இக்குளத்தைச் சுற்றியுள்ள கரையில் காலை மற்றும் மாலை வேளையில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
கடந்த பல்வேறு காலகட்டங்களில் இந்தக் குளத்தில் கரை கட்டும் பணி, விளக்கு அமைக்கும் பணி, மரம் நடும் பணி, பூங்கா அமைக்கும் பணி என பல்வேறு பணிகள் பல லட்சம் மதிப்பில் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் அடிப்படையாக செய்ய வேண்டிய முக்கிய பணி கண்ணெதிர் காட்சியாக இருக்கிறது.
அதிகப்படியாக நான்கு மூலைகளிலும், இயல்பாக கரை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளம் மிதக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக்  குடிநீர் பாட்டில்கள் மிக அதிகம்!
மற்றொன்று மிக முக்கியமாக பாட்டில்களில் தண்ணீர் தேங்கி மிதக்கும்போது கொசு உற்பத்தி உருவாகுவதற்கான சூழல் அழிக்கப்படும்.
நகராட்சி நிர்வாகம், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் திரண்டு களப்பணியாற்றினால் புதுக்குளம் புதுமையான குளமாக மாறும்.
அதேபோல தொடர்ந்து  இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள் குளத்துக்குள் வீசப்படாமல் தடுக்க- மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரப் பதாகைகளை வைப்பதுடன், வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை நகர மக்கள் சுகாதாரமாக பொழுதைப் போக்கவும், பயிற்சிகளை எடுத்துக் கொள்ளவும் வசதியாக குளம் மாறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com