ஆன்டிக் நகை, வைரக் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 06th May 2019 03:26 AM | Last Updated : 06th May 2019 03:26 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை கீழ ராஜவீதியிலுள்ள வயி. சண்முகம்பிள்ளை ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு ஆன்டிக் நகைகள் மற்றும் வைரக் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை மாலை திரைப்பட நடிகை பிரியா ஆனந்த் தொடங்கி வைத்தார்.
வரும் மே 7ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு இந்தக் கடையில் தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் வாங்குவதற்கான முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரத்யேக ஆன்டிக் நகை மற்றும் வைரக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திரைப்பட நடிகை பிரியா ஆனந்த் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
ஜூவல்லரி உரிமையாளர்கள் வயி.ச. வெங்கடாசலம் பிள்ளை மற்றும் ராகுல் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.