முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அறந்தாங்கி நகராட்சியில் திடீர் சோதனை
By DIN | Published On : 15th May 2019 08:36 AM | Last Updated : 15th May 2019 08:36 AM | அ+அ அ- |

அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த திடீர் சோதனையில் சாலையில் கடை போட்டு மீன் விற்றது, நகராட்சி முத்திரையின்றி இறைச்சி விற்றது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுக்கு ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடந்த வாரச்சந்தையில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற அறந்தாங்கி முத்துசாமி மகன் சுந்தரம், முத்துவீரன் மகன் கணேசன், அய்யம்மா, மற்றும் முகமது கனி உள்ளிட்டோரிடம் இருந்து ரூ. 1050 அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்த 2 கிலோ பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல, அறந்தாங்கி கெங்காதாரபுரத்தைச் சேர்ந்த ராஜமுகமது நகராட்சி முத்திரை வைக்காத ஆட்டிறைச்சியை விற்றதற்காக அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்து, இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அறந்தாங்கி ஜே.ஜே. நகரைச் சேர்ந்த மதர்ஷா மகன் எம். பக்ரிமுகமது அக்னி பஜாரில் சாலையோரம் அனுமதியின்றி மீன்கடை வைத்து விற்பனை செய்தமைக்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதே பகுதியில் சேக்தாவூது மகன் எஸ். அப்பாஸ் என்பவர் மீன்கடைக் கழிவுகளை சாலையோரம் ஊற்றியதற்காக ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் நகராட்சி ஆணையர் ஆர். வினோத், சுகாதார ஆய்வாளர் எஸ். சேகர், மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.