சுடச்சுட

    

    நுரையீரல் இயக்கத்தை நிறுத்தி நெஞ்சிலிருந்த கட்டி அகற்றம்: அரசு மருத்துவக் கல்லூரியில் அரிய அறுவைச் சிகிச்சை

    By DIN  |   Published on : 16th May 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட் டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு அவரது நுரையீரலின் ஒரு பகுதியின் இயக்கத்தை இரண்டரை மணி நேரம் நிறுத்தி, நெஞ்சுப் பகுதியில் இருந்த 10 செமீ கனமுள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
    புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பள்ளத்திவயலைச் சேர்ந்தவர் உடையப்பன் (50). இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் இருந்ததால் கடந்த ஏப். 28ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி பல மாதங்கள் உடையப்பன் சுயமாக மருந்து எடுத்து வந்துள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது நெஞ்சுப் பகுதியில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
    இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமையில், தலைமை இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் தினேஷ், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, தலைமை மயக்கவியல் மருத்துவர் ரவிக்குமார், உதவி மருத்துவர் அறிவரசன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த மே 9ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது.  இந்த அறுவைச் சிகிச்சையின்போது வலது பக்க நுரையீரல் இயங்காமல் தளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்துவிட்டு, இடது பக்க நுரையீரலை இயக்க பிரத்யேகமான குழாய் ஒன்றைப் பொருத்தி சுமார் இரண்டரை மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இரு நுரையீரல்களையும் இயக்கியதாக முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார். 10 செமீ கனமுள்ள கட்டி அகற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து தற்போது உடையப்பன் நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.  தனியார் மருத்துவமனைகளில் ரூ. 2.5 லட்சம் செலவாகலாம் எனக் கருதப்படும் இந்த அறுவைச் சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai