கிராமக் கணக்குகள் தணிக்கை :ஜமாபந்திகளில் பங்கேற்க அழைப்பு

கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்யும் வருவாய்த் தீர்வாயம் வரும் ஜூன் 6, 11, 12, 13 ஆகிய தேதிகளில்

கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்யும் வருவாய்த் தீர்வாயம் வரும் ஜூன் 6, 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும்,  விஏஓக்களால் பராமரிக்கப்படும் வருவாய் கிராமக் கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பசலியின் (ஆண்டு) இறுதி மாதத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால்  தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்- ஜமாபந்தி) செய்யப்படுகிறது. 
இதேபோல நடப்பு பசலி ஆண்டிற்கு (1428) புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும்  ஜூன் 6 முதல் கிராமக் கணக்குகள் தணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.  அதன் விவரம்:
புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில்... ஜூன் 6ஆம் தேதி வாராப்பூர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி புதுக்கோட்டை உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதேபோல குளத்தூர் வட்டாட்சியரகத்தில் 6ஆம் தேதி நார்த்தாமலை உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி மாத்தூர் உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி கிள்ளுக்கோட்டை உள்வட்டத்துக்கும், 13ஆம் தேதி குன்றான்டார்கோவில் உள்வட்டத்துக்கும், 18ஆம் தேதி கீரனூர் உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
அறந்தாங்கி வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி அத்தாணி உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி நாகுடி உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி பூவத்தக்குடி உள்வட்டத்துக்கும், 13ஆம் தேதி அரசர்குளம்  உள்வட்டத்துக்கும், 18ஆம் தேதி சிலட்டூர் உள்வட்டத்துக்கும், 19ஆம் தேதி அறந்தாங்கி உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் 6ஆம்  தேதி வல்லநாடு உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி கீரமங்கலம் உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி வெண்ணாவல்குடி உள்வட்டத்துக்கும், 13ஆம் தேதி ஆலங்குடி உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
மணமேல்குடி வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி பெருமருதூர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி கோட்டைப்பட்டினம் உள்வட்டத்துக்கும், 12ம் தேதி சிங்கவனம் உள்பட்டத்துக்கும், 13ஆம் தேதி மணமேல்குடி உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
இலுப்பூர் வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி குடுமியான்மலை உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி சித்தன்னவாசல் உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி வீரப்பட்டி உள்வட்டத்துக்கும், 13ஆம் தேதி இலுப்பூர் உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
கந்தர்வகோட்டை வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி புதுநகர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி கல்லாக்கோட்டை உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி கந்தர்வகோட்டை உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் 6ஆம் தேதி மழையூர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி கறம்பக்குடி உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி காரையூர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி அரசமலை உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி பொன்னமராவதி உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது.  ஆவுடையார்கோவில் வட்டாட்சியரகத்தில் 6ஆம் தேதி பொன்பேத்தி உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி மீமிசல் உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி ஏம்பல் உள்வட்டத்துக்கும், 13ஆம் தேதி ஆவுடையார்கோவில் உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
விராலிமலை வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி கொடும்பாளூர் உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி நீர்பழனி உள்வட்டத்துக்கும், 12ஆம் தேதி விராலிமலை உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது. 
திருமயம் வட்டாட்சியரகத்தில்... 6ஆம் தேதி செங்கீரை உள்வட்டத்துக்கும், 11ஆம் தேதி கீழாநிலை உள்வட்டத்துக்கும். 12ஆம் தேதி கோட்டூர் உள்வட்டத்துக்கும்,  13ஆம் தேதி விராச்சிலை உள்வட்டத்துக்கும், 18ஆம் தேதி திருமயம் உள்வட்டத்துக்கும் நடைபெற உள்ளது.கடைசி நாளன்று வருவாய்த் தீர்வாயம் முடிந்தவுடன் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் குடிகள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் கொடுத்துப் பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com